சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு: இந்தியாவின் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நிவாரணம்

Posted On: 21 NOV 2022 3:14PM by PIB Chennai

19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு, பனாமாவின் செனிக் நகரத்தில் நவம்பர் (2022) 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

10 கிலோ கிராம் எடையிலான ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அழிந்து வரும் இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின்  அனுமதி தேவைப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு காரணமாக இந்தியாவின் ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்படும் அறைகலன் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 50,000 கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில், ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதியின் அளவை அதிகரிப்பது குறித்து இந்தியா பரிந்துரைத்தது. இந்திய பிரதிநிதிகள் அளித்த நீண்ட விளக்கங்களுக்கு பிறகு 10 கிலோ கிராமுக்கு குறைவாக எடை கொண்ட ஒவ்வொரு  ரோஸ்வுட் மரத்தாலான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மரத்தாலான பொருட்கள் மட்டுமே, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இரும்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள், இதில் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கை இந்திய கைவினைஞர்களுக்கும் அறைகலன் தொழில்துறைக்கும் பெரிய நிவாரணமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877691

------

MSV/IR/KPG/KRS



(Release ID: 1877730) Visitor Counter : 187