பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் கவுரவ தினத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி

Posted On: 15 NOV 2022 9:15AM by PIB Chennai

எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் பழங்குடியினர் கவுரவ தின நல்வாழ்த்துகள்.

இன்று பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தை மதிப்புடனும், மரியாதையுடனும் கொண்டாடி வருகிறோம். நாட்டின் பெரும் புதல்வரும், புரடிசியாளருமான பகவான் பிர்சா முண்டாவை நான் வணங்குகிறேன். இந்தியாவின் பழங்குடியினரைப் பெருமைப்படுத்தும் நாள் நவம்பர் 15. இந்த நாளை பழங்குடியினர் கவுரவ தினமாக அறிவிக்கும் வாய்ப்பை எனது அரசு பெற்றதை பெரும்பேறாக கருதுகிறேன்.

நண்பர்களே, விடுதலைப்போராட்டத்தில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பை புறம்தள்ள முடியாது. விடுதலைப் போராட்டத்தில்  ஏராளமான முக்கிய பழங்குடியின இயக்கங்கள் பங்கேற்றன.

. திலக் மாஞ்சி தலைமையிலான டாமின் சங்க்ராம், புத்து பகத்தின் தலைமையிலான லர்கா இயக்கம், சித்து-கன்ஹு கிராந்தி, தானா பகத் இயக்கம், வேக்தா பில் இயக்கம், நாய்க்டா இயக்கம், சந்த் ஜோரியா பரமேஷ்வர் மற்றும் ரூப் சிங் நாயக், லிம்டி தாஹோத் போர், மன்கரின் கோவிந்த் குருஜி, அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான   ரம்பா இயக்கம் ஆகியவை விடுதலைப் போரில் பெரும்பங்கு வகித்தன.

நண்பர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் மற்றும் ஜன்தன், கோபர்தன், வன்தன், சுயஉதவி குழுக்கள், தூய்மை இந்தியா, பிரதமரின் வீட்டுவசதி திட்டம், தாய்மார்களுக்கான பிரசவ உதவித்தொகை, கிராம சாலைகள் திட்டம், மொபைல் இணைப்பு, ஏக்லவ்யா பள்ளிகள், 90 சதவீத வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ரத்த சோகைக்கான தடுப்பூசிகள் பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்கள், இலவச கொரோனா தடுப்பூசிகள், இந்திர தனுசு இயக்கம் ஆகிய பல்வேறு திட்டங்கள் மற்றும் இயக்கங்கள் பழங்குடியினர் சமுதாயத்தினருக்கு பெருமளவில் உதவியுள்ளன.

நண்பர்களே, இந்த பெரும் பாரம்பரியத்திலிருந்து இந்தியா தனது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பழங்குடியின கௌரவ தினம் இதற்கான வாய்ப்பாகவும், ஊடகமாகவும் மாறும் என்று நான்  நிச்சயமாக நம்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி!

பொறுப்பு துறப்பு ; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

*********

MSV/PKV/DL


(Release ID: 1877535) Visitor Counter : 410