மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதியாண்டு 2022-23-க்கான தேசிய வருவாய்நிலை மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் (புதிய/புதுப்பிக்கும்) சமர்ப்பிக்கும் கடைசி தேதி 2022 நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது

Posted On: 17 NOV 2022 1:18PM by PIB Chennai

நிதியாண்டு 2022-23-க்கான தேசிய வருவாய்நிலை மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் (புதிய/புதுப்பிக்கும்) சமர்ப்பிக்கும் கடைசி தேதி 2022 நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 8-ஆம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்தி விடாமல் தடுப்பதற்கும், உயர்நிலை கல்வியை அவர்கள் தொடர்வதற்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 9-ஆம் வகுப்பிலிருந்து தெரிவு செய்யப்படும் 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை மாநில அரசு, அரசு உதவி பெறும், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது.

தங்கள் பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.3,50,000-க்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி உள்ளவர் ஆவர். மேலும், இந்த உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீத தளர்வு இருக்கும்) அல்லது 7-ஆம் வகுப்புக்கு சமமான கல்வித் தகுதி இருக்க வேண்டும்.

இரண்டு நிலையிலான சரிபார்ப்புகளில் முதல்நிலை சரிபார்ப்பு 2022 டிசம்பர் 15 அன்றும், இரண்டாம்நிலை சரிபார்ப்பு 2022 டிசம்பர் 31 அன்றும் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876711

**************

SMB/KG/KRS


(Release ID: 1876852) Visitor Counter : 155