தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் பட்டியல்

திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் தொகுப்பு அந்த விழாக்களை சிறப்பானதாக ஆக்குகின்றன.  53-ஆவது இந்திய சர்வதேச  திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.  சர்வதேச தரத்துடன் இந்த விழா அமைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். 

இந்த விழாவில் திரையிடப்படும் இந்திய திரைப்படங்களின் பட்டியலும் அந்த படங்களை உருவாக்கியவர்கள், அதன் கலைஞர்கள், அந்த படங்களின் சிறப்பம்சங்கள் போன்ற விரிவான விவரங்களும், இந்த இணையதள இணைப்பில் இடம்பெற்றுள்ளன. 

https://iffigoa.org/wp-content/uploads/2022/11/IFFI-2022-Indian-Cinema-Catalog.pdf 

53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சர்வதேச திரைப்படங்களின் பட்டியல் கீழ்கண்ட இணையதள இணைப்பில் இடம்பெற்றுள்ளன.   அந்த திரைப்படங்கள் குறித்த விவரங்கள், அவற்றை உருவாக்கியவர்கள், அதில் நடித்துள்ள கலைஞர்கள், அப்படங்களின் சிறப்பம்சங்கள் போன்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

https://iffigoa.org/wp-content/uploads/2022/11/Official-Catalogue-International-Cinema-2022-1.pdf

கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் நேரில் பங்கேற்பவர்களுக்கு இந்த தொகுப்பு பெரிதும் உதவும்.  இவற்றை பார்த்து தாங்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்களை தேர்வு செய்யலாம். 

அந்த விழாவில் பங்கேற்காதவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்.  இந்த சிறந்த திரைப்படங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு மனதளவில் அவற்றுடன் தொடர்புபடுத்திக்கொண்டு  தகவல்களை தெரிந்து கொண்டு ஊக்கமடைய வழிவகுக்கும்.

**************

JVL/PLM/PK/KRS

iffi reel

(Release ID: 1876761) Visitor Counter : 199