சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அகில இந்திய சுற்றுலா வாகன (அங்கீகாரம் அல்லது அனுமதி) விதிகள், 2021-ஐ மாற்றி அமைப்பதற்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Posted On: 15 NOV 2022 12:56PM by PIB Chennai

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 11 நவம்பர் 2022 அன்று அகில இந்திய சுற்றுலா வாகன (அங்கீகாரம் அல்லது அனுமதி) விதிகள், 2021-ஐ மாற்றி அமைப்பதற்காக ஜி.எஸ்.ஆர். 815(இ) வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

2021-ல் அறிவிக்கப்பட்ட விதிகள், சுற்றுலா வாகனங்களுக்கான அனுமதி முறையை நெறிப்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் சுற்றுலாத் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தருந்தன.

இப்போது, ​​முன்மொழியப்பட்டுள்ள அனைத்திந்திய சுற்றுலா வாகன (அனுமதி) விதிகள்- 2022-ன் மூலமாக, சுற்றுலா அனுமதி முறை மேலும் நெறிப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும்.

முன்மொழியப்பட்டுள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1.அனைத்திந்திய அனுமதி விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறையை எளிதாக்குவதற்கும், இணக்கச் சுமையைக் குறைப்பதற்கும், அங்கீகாரம் மற்றும் அகில இந்திய சுற்றுலா அனுமதி ஆகியவை ஒன்றுக்கொன்று சார்பற்றதாக மாற்றப்பட்டுள்ளன.

2.சுற்றுலா வாகனங்களில் உள்ள பல வகைகளில், குறைந்த திறன் கொண்ட வாகனங்களுக்கு (பத்துக்கும் குறைவான இருக்கை) குறைந்த அனுமதிக் கட்டணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. குறைந்த இருக்கை வசதி கொண்ட, சிறிய வாகனங்களைக் கொண்ட சிறிய சுற்றுலா வாகன இயக்கதாரர்களுக்கு இது பெரிய அளவில் நிதி நிவாரணத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள் இப்போது தங்கள் வாகனம் அல்லது வாகனங்களின் இருக்கைத் திறனுக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

3.மின்சார வாகனங்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, வாகன இயக்க நிறுவனத்தினருக்கு எந்த செலவும் இல்லாமல் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

**************

MSV/PLM/RS/IDS



(Release ID: 1876103) Visitor Counter : 163