தேர்தல் ஆணையம்
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் மிக அதிகமான பறிமுதல்கள்
Posted On:
11 NOV 2022 12:51PM by PIB Chennai
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மிக அதிகமான பறிமுதல்கள் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது ஒட்டுமொத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 27.21 கோடி பறிமுதல்களை விட அதிகமாகும்.
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 50.28 கோடி, தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 9.03 கோடியை விட இது ஐந்து மடங்கு அதிகம். இது தவிர குடிமக்கள் விழிப்புடன் இருந்து சி விஜில் (cVigil) செயலியை பரவலாகப் பயன்படுத்தினால் தேர்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
10.11.2022 வரை குஜராத்தில் ரூ. 50.28 கோடியும், இமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 71.88 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதில் ரொக்கம், மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், விலையில்லா பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
**************
SMB/RB/IDS
(Release ID: 1875182)
Visitor Counter : 247