பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நவம்பர் 8ஆம் தேதி வெளியிடுகிறார்


இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் இந்தியாவின் செய்தி மற்றும் அதிக முன்னுரிமைகளை உலகிற்கு கொண்டுசெல்லும்

ஜி20 தலைமைத்துவம், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய பிரச்சனைகளில் பங்களிக்க இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது

ஜி20க்கு தலைமை ஏற்கும் காலகட்டத்தில் , நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது

Posted On: 07 NOV 2022 11:38AM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நவம்பர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் வெளியிடுகிறார்

 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமை வகிக்கும்  வகையில் உருவாகி வருகிறது. இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்தியா டிசம்பர் 1, 2022 முதல் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நமது ஜி20 தலைமைக்கான  இலச்சினை, கருப்பொருள், இணையதளம் ஆகியவை இந்தியாவின் செய்தி மற்றும் அதிக முன்னுரிமைகளை உலகளவில் பிரதிபலிக்கும்.

ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட  சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும்.  ஜி20 தலைமையின் போது, நாடு  முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

**************

AP/PKV/IDS


(Release ID: 1874230) Visitor Counter : 239