புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 அக்டோபருடன் ஒப்பிடும்போது, 2022 அக்டோபரில், காற்று மாசுபாடு தொடர்பான முட்புதர்கள் எரிப்பு வழக்குகள் ராஜஸ்தானில் 160 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை

Posted On: 06 NOV 2022 4:47PM by PIB Chennai

புதுதில்லியின் காற்றின் தரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ‘மோசமான’ நிலையில் நீடிப்பதால், தொடக்கப் பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்ட வேளையில், மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்(தனிப் பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ராஜஸ்தானில் 160 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 20 சதவீதம்  காற்று மாசுபாடு தொடர்பான முட்புதர்கள் எரிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு மாநில அரசுகள் முட்புதர்கள் எரிவதைக் கட்டுப்படுத்த போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புதுதில்லி என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு அதிகளவில் பங்களிக்கிறது என்றும் அவர் கூறினார்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பொறுப்பாளராகவும் இருக்கும்  மத்திய இணை அமைச்சர்,  ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் முட்புதர் எரிப்பு சம்பவங்களை வெகுவாக குறைத்துள்ளன என்று கூறினார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் காற்றின் தரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை என்றும்  திரு நரேந்திர மோடி அரசால் முட்புதர்  மேலாண்மைக்கான இயந்திரங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்ட நிதியை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

 

2018-19 முதல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ 3,138 கோடியை முட்புதர் மேலாண்மைக்காக வழங்கியதாகவும், அதில் கிட்டத்தட்ட ரூ 1,500 கோடி பஞ்சாபிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

பல மாநிலங்கள் முட்புதர் மேலாண்மையில் பாராட்டத்தக்க வேலையைச் செய்து, படிப்படியாக நேர்மறையான திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தொடரும் மோசமான சூழ்நிலையை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் நோக்கம் மற்றும் நேர்மை  குறித்து பல கேள்விகளை எழுப்புவது ஏன் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

**************

AP/GS/BDL


(Release ID: 1874134) Visitor Counter : 213