மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்விக்குச் செல்லும் மொத்த மாணவர் விகிதம் (GER) 2020-21 உடன் ஒப்பிடும்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டில் அதிகரிப்பு: ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி அனைத்திலும் முன்னேற்றம்
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2021-22-ஆம் ஆண்டில் மாணவிகளின் எண்ணிக்கை 8 லட்சம் அதிகரிப்பு
2021-22-ம் ஆண்டில் பட்டியல் வகுப்பு, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறப்புக் குழந்தைகளின் (மாற்றுத் திறனாளிகள்) மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது
Posted On:
03 NOV 2022 10:02AM by PIB Chennai
பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (UDISE+) 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான விரிவான அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் இருந்து இணையதள தரவு சேகரிப்பு யுடிஐஎஸ்இ+ (UDISE +) நடைமுறை, 2018-19-ம் ஆண்டில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் உருவாக்கப்பட்டது. இது காகித வடிவில் நேரடியாகத் தரவுகளை நிரப்பும் பழைய நடைமுறை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது. யுடிஐஎஸ்இ+ முறையில், தரவு சேகரிப்பு, தரவுகளை இணைத்தல் மற்றும் தரவு சரிபார்ப்பு தொடர்பான அம்சங்களில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021-22-ம் ஆண்டில், யுடிஐஎஸ்இ+-ல், புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் முன்முயற்சிகளுக்கு ஏற்ப முதல்முறையாக, மின்னணு நூலகம், இணைந்து கற்றல், கடினமான பகுதிகளை அடையாளம் காணுதல், பள்ளி நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை போன்ற முக்கியமான அம்சங்கள் பற்றிய கூடுதல் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்:
2020-21 ஆம் ஆண்டில் 25.38 கோடி என்ற அளவில் மாணவர் எண்ணிக்கை இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில் தொடக்க நிலை முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிக் கல்வியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.57 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19.36 லட்சம் அதிகமாகும். 2020-21-ம் ஆண்டில் 4.78 கோடியாக இருந்த பட்டியல் வகுப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2021-22-ம் கல்வி ஆண்டில் 4.82 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், 2020-21-ம் ஆண்டில் 2.49 கோடியாக இருந்த பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ம் ஆண்டில் 2.51 கோடியாக அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 11.35 கோடியாக இருந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ம் கல்வி ஆண்டில் 11.48 கோடியாக அதிகரித்துள்ளது.
2020-21-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2021-22 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வியின் ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் பொதுப் பங்கேற்பை அளவிடும் மொத்த உயர்கல்வி விகிதம் (GER) மேம்பட்டுள்ளது. மேல்நிலைப் படிப்பில் 2020-21-ம் ஆண்டில் 53.8 சதவீதமாக இருந்த ஜிஇஆர், 2021-22-ம் ஆண்டில் 57.6 சதவீதமாக குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது.
2020-21-ம் ஆண்டில் 21.91 லட்சமாக இருந்த சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளின் (மாற்றுத் திறனாளிகள் - CWSN) மொத்த எண்ணிக்கை 2021-22-ம் ஆண்டில் 22.67 லட்சமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 2020-21 ம் ஆண்டை விட 3.45 சதவீதம் அதிகமாகும்.
2021-22-ம் ஆண்டில் 95.07 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிக் கல்வியில் பணியாற்றினர். அவர்களில் 51 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண் ஆசிரியர்கள். மேலும், 2021-22-ல், மாணவர் - ஆசிரியர் விகிதம் (PTR) ஆரம்பக் கல்வியில் 26 ஆகவும், இடைநிலைக் கல்வியில் 19 ஆகவும், உயர்நிலைக் கல்வியில் 18 ஆகவும் மேல்நிலைக் கல்வியில் 27 ஆகவும் இருந்தது. 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது நல்ல வளர்ச்சி ஆகும். 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்- ஆசிரியர் விகிதம் ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் முறையே 28, 19, 21, மற்றும் 30 ஆக இருந்தது.
தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை, 2021-22-ம் ஆண்டில் 12.29 கோடி பெண் குழந்தைகள் கல்வி பயின்றனர். இது 2020-21-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 8.19 லட்சம் அதிகமாகும்.
2020-21-ல் 4.78 கோடியாக இருந்த பட்டியல் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ம் ஆண்டில் 4.83 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 2020-21-ம் ஆண்டில் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை 2.49 கோடியிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 2.51 கோடியாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை 11.35 கோடியிலிருந்து 11.49 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
2020-21-ல் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22ல் 14.89 லட்சமாக உயர்ந்துள்ளது. தனியார் மற்றும் இதர மேலாண்மைப் பள்ளிகள் மூடப்பட்டதும், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை குழுவாக்கம் செய்து இணைத்ததும், மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம் ஆகும்.
பள்ளி உள்கட்டமைப்பு: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் தாக்கம்:
2021-22-ம் ஆண்டில் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை பின்வருமாறு:
- மின் இணைப்பு: 89.3%
- குடிநீர்: 98.2%
- பெண்கள் கழிப்பறை: 97.5%
- சிறப்புக் குழந்தைகளுக்கான (CWSN) கழிப்பறை வசதி: 27%
- கை கழுவும் வசதி: 93.6%
- விளையாட்டு மைதானம்: 77%
- சிறப்புக் குழந்தைகளுக்கான சாய்வு கைப்பிடி வசதி: 49.7%
- நூலகம்/ வாசிப்பு அறை/ படிக்கும் அறை: 87.3%
பள்ளிக்கான நிலையான சுற்றுச்சூழல் முன்முயற்சிகள்
- சமையலறை தோட்டம்: 27.7%
- மழை நீர் சேகரிப்பு: 21%
***************
SM/PLM/PK/IDS
(Release ID: 1873375)
Visitor Counter : 486