பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எத்தனால் விநியோக ஆண்டு 2022-23-க்கான திருத்தியமைக்கப்பட்ட எத்தனால் விலை

प्रविष्टि तिथि: 02 NOV 2022 3:23PM by PIB Chennai

டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரை சர்க்கரை பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளை அடிப்படையாகக் கொண்ட மூலப் பொருட்களிலிருந்து பெறப்படும்.  எத்தனாலுக்கான  அதிகபட்ச விலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

அதன்படி, ‘சி’ வகையிலான எத்தனால், லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆக உள்ளது.

‘பி’ வகையிலான  எத்தனால் லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால், லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சரக்கு மற்றம் சேவை வரி மற்றும் போக்குவரத்து செலவுகளும் செலுத்தப்படும். 

 

**************

SM/IR/KPG/IDS


(रिलीज़ आईडी: 1873183) आगंतुक पटल : 307
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam