ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பு நிதியாண்டில், அக்டோபர் 2022 வரையிலான காலகட்டத்தில் சரக்கு ரயில் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது

Posted On: 01 NOV 2022 3:52PM by PIB Chennai

இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 17% அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் 22 முதல், அக்டோபர்  மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரயில் மூலம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த அக்டோபர் மாத சரக்குரயில் வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாய்  ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், சரக்குரயில் வருவாய் 17%  அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 117,34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் 118,94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது.

 

**************

AP/ES/IDS


(Release ID: 1872768) Visitor Counter : 140