உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு முகாம் 2.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
01 NOV 2022 12:05PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அக்டோபர் 2-ம்தேதி முதல் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் 2.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் 2.0ல் மொத்தம் 11 ஆயிரத்து 559 இடங்களில் இயங்கும் மக்கள் வந்துசெல்லும் அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு முகாமில் 2.0ல் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களைச் சேர்ந்த மொத்தம் 5.15 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதிலிருந்து 4.77 லட்சம் கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டதுடன், 2.81கோப்புகள் களையெடுக்கப்பட்டன.
தேவையில்லாத குப்பைகளை அகற்றியதன் மூலம் ரூ.1 கோடியே 40 லட்சத்து 99 ஆயிரத்து150 வருவாய் ஈட்டியதாகவும், 90 ஆயிரத்து 525 சதுர அடி காலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் மொத்தம் 5,126 குறைதீர்ப்பு மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் இருந்து 4 ஆயிரத்து 708 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன.
இதேபோல் மத்திய ஆயுதக் காவல்படை, டெல்லி காவல் துறை மற்றும் அதற்கு உட்பட்ட அலுவலகங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட டுவிட்டர் பதிவுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதில் அளித்து மறுபதிவு செய்யப்பட்டது.
**************
AP/ES/IDS
(रिलीज़ आईडी: 1872759)
आगंतुक पटल : 236