குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுதுணைத் தலைவர் பொற்கோவிலுக்கு சென்றிருந்தார்; நமது மகத்தான குருக்களின் ஆன்மிகபாரம்பரியத்திற்கு ஒளிரும் உதாரணம் இது என்று அவர் குறிப்பிட்டார்

प्रविष्टि तिथि: 26 OCT 2022 6:12PM by PIB Chennai

அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிபுக்கு (பொற்கோவிலுக்கு) இன்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் சென்றிருந்தார். நமது மகத்தான குருக்களின் ஆன்மிக பாரம்பரியத்திற்கு ஒளிரும் உதாரணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு முதன்முறையாக இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவர், அமிர்தசரஸூக்கு சென்றிருந்தார். பொற்கோவிலில் உள்ள அமைதி, ஈடுபாடு, சேவை உணர்வு ஆகியவை மறக்கமுடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டார்.

பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பு எழுதிய அவர், குருக்களுக்கு புகழாரம் சூட்டினார். பன்னெடுங்காலமாக அன்பு, மனிதாபிமானம், கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை ஸ்ரீஹர்மந்திர் சாஹிப் செய்தியாக வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் போது, பொற்கோவிலில் குடியரசு துணைத் தலைவர் உணவு அருந்தினார். தமது குடும்ப உறுப்பினர்களுடன் சேவையிலும் பங்கேற்றார்.

இதன்பின்னர், ஜாலியன் வாலாபாக் சென்றிருந்த அவர், தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்த இடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடம் என்று அவர் கூறினார்.

ஸ்ரீதுர்கையானா கோவில் மற்றும் ஸ்ரீராம் தீர்த்தம் ஆகியவற்றுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்த குடியரசு துணைத் தலைவர் தரிசனமும், பூஜையும் செய்தார்.

*****


(रिलीज़ आईडी: 1871048) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada