பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-க்கு இடையே ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புத் துறை செயலாளர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்

Posted On: 19 OCT 2022 9:01AM by PIB Chennai

பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் ஒரு பகுதியாக இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது பேச்சுக்களுக்கு குஜராத் மாநிலம் காந்தி நகரில் அக்டோபர் 18, 2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நாளில் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பல்வேறு எண்ணிக்கையிலான இருதரப்பு கூட்டங்களை பாதுகாப்புத் துறை செயலாளர் நடத்தினார்.

இக் கூட்டத்தில் சூடான் நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இஸ்மான் முகமத் ஹசன் கரர், சூடான் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரஸ்காத் அப்தல்ஹமீத் இஸ்மாயில் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜாம்பியா பாதுகாப்புத் துறை நிரந்தர செயலாளர் திரு.நார்மன் சிப்பாகுபாக்கு தலைமையிலான குழுவினர், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமாரை சந்தித்துப் பேசினார்கள்.

நைஜர் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் தித்திலி அமாது தலைமையிலான குழுவினரை டாக்டர் அஜய் குமார் சந்தித்தார்.

மாலி நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மேஜர் ஜெனரல் சித்திகி சமகே தலைமையிலான குழுவினர் பாதுகாப்புத் துறை செயலாளரை சந்தித்துப் பேசினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1869035

IR/Sri/RR/SHA

****(Release ID: 1869096) Visitor Counter : 161