பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேச மாநிலம் உனாவில் மருந்தகம், கல்வி மற்றும் இணைப்பு சம்பந்தமான திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
Posted On:
13 OCT 2022 1:42PM by PIB Chennai
குருநானக் மற்றும் இதர குருக்களை நினைவு கூர்ந்து, இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை இன்று வழங்குவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உனாவில் தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது. இன்று நாட்டின் இரண்டாவது மொத்த மருந்தக பூங்கா உனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நண்பர்களே, இதைவிட பெரிய பரிசு வேறு ஏதும் இருக்க முடியுமா? இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விமானத்தில் பயணம் செய்திராத அல்லது விமானத்தையே பார்த்திராத மக்களும் உள்ளனர். அதே வேளையில் இமாச்சல மலைப் பிரதேசத்தில் வசிக்கும் பல தலைமுறை மக்கள் ரயிலில் பயணம் செய்யாமலோ, அல்லது ரயிலையே பார்க்காமலோ உள்ளனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இது போன்ற நிலை தொடர்கிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் ஏராளமான மிகப்பெரிய நகரங்களுக்கு முன்பே, இமாச்சலில் நான்காவது வந்தே பாரத் ரயில் சேவை சற்று முன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இமாச்சலுக்கு சொந்தமான ஐ.ஐ.ஐ.டி நிறுவனத்தின் நிரந்தரமான கட்டிடமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் புதிய தலைமுறையினரின் கனவுகளுக்கு இந்த திட்டங்கள் புதிய உத்வேகத்தை அளிக்க உள்ளன.
நண்பர்களே,
இமாச்சலிலும் தில்லியிலும் இதற்கு முன்பு இருந்த அரசுகள் உங்களது தேவைகளை நிறைவேற்றுவதில் வேறுபாடு காட்டியதுடன் உங்கள் நம்பிக்கை மற்றும் விருப்பங்களில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. எனினும் நம்முடைய அரசு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்களது நம்பிக்கை, விருப்பங்களை நிறைவேற்றவும் முழு வீச்சுடன் பணிபுரிகிறது. ரயில் இணைப்பு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த நூற்றாண்டிலேயே மக்களுக்கு சென்றடைந்திருக்க வேண்டும், இவை தற்போது தான் வழங்கப்படுகிறது.
நண்பர்களே,
தங்கள் உயர் கல்விக்காக மாநிலத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் வர வேண்டும் என்பது இமாச்சலப் பிரதேச இளைஞர்களின் நீண்ட நாள் கனவு. கடந்த காலங்களில் உங்களது இந்த விருப்பமும் உதாசினப்படுத்தப்பட்டது. கடந்த கால நடைமுறைகளை நாங்கள் மாற்றி வருகிறோம். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவது, எங்களின் மிகப்பெரிய முன்னுரிமை. ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டின் பாதுகாப்பிற்கு இமாச்சலப் பிரதேச இளைஞர்கள் புதிய பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சுதந்திரத்தின் அமிர்த காலத்தின் போது இமாச்சலின் வளர்ச்சிக்கான பொற்காலம் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். பல தசாப்தங்கள் நீங்கள் காத்திருந்த உயரத்திற்கு இந்த தருணம் மாநிலத்தை கொண்டு செல்லும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
**********
(Release ID: 1867993)
Visitor Counter : 118
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam