குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அசாமில் குடியரசுத்தலைவர்; ஐஐடி, குவஹாத்தியில் அதிக சக்தி வாய்ந்த மைக்ரோவேவ் உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அதிநவீன கணினி வசதி மற்றும் ஆய்வகம் மற்றும் துப்ரியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தொடங்கிவைத்தார்; என்ஐவி-யின் 2 மண்டல நிறுவனங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 13 OCT 2022 6:22PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஐஐடி குவஹாத்தி-யில் அதிக சக்தி வாய்ந்த மைக்ரோவேவ் உபகரணங்களின்  வடிவமைப்பு மற்றும்  மேம்பாட்டிற்கான அதிநவீன கணினி வசதி மற்றும் ஆய்வகத்தை  இன்று (13.10.2022) தொடங்கிவைத்தார். அத்துடன் துப்ரியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தொடங்கிவைத்தார். அத்துடன் அசாமில் திப்ருகர், மத்தியப்பிரதேசத்தில் ஜபல்பூர் ஆகிய இடங்களில், தேசிய நோயியில் கழகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், குறுகிய காலத்தில் ஐஐடி குவஹாத்தியின் செயல்பாடுகள் மூலம் பிராந்தியம், தேசியம்  மற்றும் சர்வதேச அளவில் பெருமை அளிப்பதாக தெரிவித்தார். 

வடகிழக்கு பிராந்தியத்தில் தேவையான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் முக்கிய மையமாக ஐஐடி, குவஹாத்தி திகழ்கிறது என்று கூறினார்.

தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்புகளில், முன்னணி நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கு நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.

 

**************

IR/Gee/SM/Sne


(रिलीज़ आईडी: 1867543) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi