ஜவுளித்துறை அமைச்சகம்

கைவினைக் கலைஞர்கள் சந்தைப்படுத்துதலில் ஈடுபட இணையபக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது

Posted On: 10 OCT 2022 1:53PM by PIB Chennai

சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளில் பங்கேற்க கைவினைக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற இணையப் பக்கத்தை கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. இது கைவினைக் கலைஞர்களுக்கு முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சந்தை தளத்தை வழங்குகிறது.

கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆண்டுதோறும் சுமார் 200 உள்நாட்டு சந்தைப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விண்ணப்பித்தல் முதல் கடைகள் தேர்வு வரையிலான ஆன்லைன் நடவடிக்கை மற்றும் இறுதியாக கடைகள் ஒதுக்கீடு வரை அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயல்முறை அனைத்து கைவினைஞர்களுக்கும் சமமான, நியாயமான மற்றும் வெளிப்படையான வாய்ப்புகளை வழங்கும். கைவினைக் கலைஞர்களுக்கு தெளிவை ஏற்படுத்த, விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான பரந்த வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.(அது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் கிடைக்கிறது).

கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைஞர்களுக்கான http://indian.handicrafts.gov.in என்ற இணையப் பக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், தகுதியுடைய அனைத்து கைவினைக் கலைஞர்களும் சந்தைப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

**************

KG/SM/IDS



(Release ID: 1866507) Visitor Counter : 307