உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இன்று அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70வது முழுமையான குழுக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 09 OCT 2022 7:03PM by PIB Chennai

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று வடகிழக்கு கவுன்சிலின் 70வது முழுமையான குழுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர், திரு  ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர், திரு பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடகிழக்கின் வளர்ச்சிப் பாதையில் பல தசாப்தங்களாக மூன்று பெரிய தடைகள் இருந்தன - வன்முறை மற்றும் தீவிரவாத குழுக்களால்  அமைதியின்மை, வடகிழக்கில் ரயில், சாலை மற்றும் விமான இணைப்பு இல்லாதது. முந்தைய அரசுகளிடம் வடகிழக்கு வளர்ச்சியில் உந்துதல் இல்லாதது.  முந்தைய அரசுகள்  வடகிழக்கு வளர்ச்சிக்கு ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், இப்பகுதியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என திரு அமித் ஷா தமது உரையில் தெரிவித்தார்.

வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு வடகிழக்கு மாநில முதலமைச்சர்களை திரு  அமித் ஷா வலியுறுத்தினார். வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலுக்கு ஒரு தொடர்பு  அதிகாரியை நியமிக்க வேண்டும், இதனால் இந்த தளத்தை அதிகபட்சமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

*****



(Release ID: 1866319) Visitor Counter : 186