வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“நாளைய நகரங்கள்” - புகைப்படக் கண்காட்சி 2022 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

Posted On: 03 OCT 2022 4:56PM by PIB Chennai

புதுமைப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகரங்களுக்கான முதலீட்டு திட்டத்தின்கீழ், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம், இந்திய நகரங்களின் புதுமையான மற்றும் வளர்ச்சியை சித்தரிக்கும் நோக்கத்துடன், “நாளைய நகரங்கள்” என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி என்பது சாமானிய குடிமகனின் பார்வையை அடிப்படையாக கொண்டுள்ளது. புதுமைப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த நகரங்களுக்கான முதலீடு திட்டம் செயல்படுத்தப்படும் 12 பொலிவுறு நகரங்களில் நடைபெற்ற புகைப்படப் போட்டிகளின் உச்சக்கட்டமாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

புதுமைப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகரங்களுக்கான முதலீட்டு திட்டம் என்பது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ஃப்ரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாகும். புதுமையான மற்றும் நிலையான நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மற்றும் செயல்படுத்த இந்தியா முழுவதும் உள்ள 12 நகரங்களுக்கு இந்த திட்டம் உதவுகிறது. சென்னை, அகர்தாலா, அமிர்தசரஸ், புவனேஸ்வர், டேராடூன், ஹுப்பள்ளி, தர்வாட், கொச்சி, புதுச்சேரி, சூரத், உஜ்ஜைன் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

“நாளைய நகரங்கள்” போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், புதுமைப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நகரங்களுக்கான முதலீட்டு திட்டத்தின் மையப்பகுதியான பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள், பொது திறந்தவெளிகள், மின்ஆளுமை, தகவல் மற்றும் தொலைத்தொடர்புகள், குறைந்த வருமானம் உடைய குடியேற்றப் பகுதிகளின் சமூக மற்றும் நிறுவனக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை கருப்பொருளாக கொண்டிருக்க வேண்டும். இதில் 400-க்கும் மேற்பட்டோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர். புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்களான திரு.ரகு ராய், திருமதி.கேதகி ஷெத் மற்றும் திரு.சௌனக் பானர்ஜி ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

 

                             **************


(Release ID: 1864815)