நிலக்கரி அமைச்சகம்
செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 12% அதிகரித்து 57.93 மில்லியன் டன்னாக இருந்தது
Posted On:
03 OCT 2022 4:43PM by PIB Chennai
இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 51.72 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 12.01 சதவீதம் அதிகரித்து 57.93 மில்லியன் டன்னாக இருந்தது.
முதன்மையான 37 சுரங்கங்களில் 25 சுரங்கங்களில் 100 சதவீதத்திற்கு மேல் நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது. மற்ற 5 சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 80 முதல் 100 சதவீதத்திற்குள் இருந்தது.
நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 13.40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த மின்உற்பத்தி 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
------
(Release ID: 1864805)
Visitor Counter : 198