பிரதமர் அலுவலகம்
கப்பர் தீர்த்தலில் நடைபெற்ற மகா ஆராத்தியில் பிரதமர் கலந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
30 SEP 2022 9:20PM by PIB Chennai
நவராத்திரியை முன்னிட்டு கப்பர் தீர்த்தலில் நடைபெற்ற மகா ஆரத்தியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். குஜராத்தில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான கப்பர் தீர்த்தலுக்கு அருகில் அமைந்துள்ள அன்னை அம்பா தேவி கோயிலிலும் பிரதமர் மோடி பூஜைகள் செய்து வழிபட்டார். கோயில் ஆச்சார்யகளால் மகா ஆரத்தி நடத்தப்பட்டது. அபு மலைத்தொடரில் அன்னை துர்க்கா தேவியின் பிரம்மாண்ட உருவம் லேசர் விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கோயிலின் வசதிகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
**************
(रिलीज़ आईडी: 1864684)
आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam