பிரதமர் அலுவலகம்

தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 30 SEP 2022 10:44PM by PIB Chennai

தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: 

 

"தேசிய திரைப்பட விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கவுரவிப்பு அவர்களின் படைப்பாக்கத்திற்கும் பொழுதுபோக்கு, கலை, மற்றும் கலாச்சார உலகத்திற்கான பங்களிப்புக்கும் தகுதியான அங்கீகாரம் ஆகும்."

**************



(Release ID: 1864061) Visitor Counter : 100