பிரதமர் அலுவலகம்
5ஜி சேவைகளை பிரதமர் அக்டோபர் முதல் தேதியன்று தொடங்கிவைக்கிறார்
இந்திய மொபைல் காங்கிரசின் 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
30 SEP 2022 11:49AM by PIB Chennai
புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை பயன்படுத்தும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார். 5ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.
இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) ஆறாவது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐஎம்சி 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான நடைமுறை மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும்.
**************
(Release ID: 1863650)
(रिलीज़ आईडी: 1863672)
आगंतुक पटल : 320
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam