குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
அகமதாபாத்தில் தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி பிரிவினர் மையத்தின் மாநாடு
प्रविष्टि तिथि:
29 SEP 2022 11:59AM by PIB Chennai
தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி பிரிவினர் மையத்தின் திட்டங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி பிரிவினர் மையத்தின் மாநாட்டிற்கு அமைச்சகம் செப்டம்பர் 28 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டியல் பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்களின் நல்வாழ்விற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சோலங்கி, தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி பிரிவினர் மையத்தின் திட்டங்களின் பயன்களை குஜராத் மாநிலத்தின் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடி தொழில்முனைவோர், அவர்களது வர்த்தக திறனை மேம்படுத்துவதில் சிரமம் ஏற்படாத வகையில், வங்கிகள் அவர்களுக்கு கடன் உதவி அளிப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மக்கள், வேலை வாய்ப்புகளை தேடுபவர்களாக அல்லாமல், அவற்றை உருவாக்குபவர்களாக செயல்பட வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக் காட்டிய டாக்டர் சோலங்கி, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பட்டியல் இன- பட்டியல் பழங்குடி தொழில்முனைவோரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1863273
**************
(रिलीज़ आईडी: 1863442)
आगंतुक पटल : 249