பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2022 5:51PM by PIB Chennai

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சிறந்த சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் இன்றிரவு டோக்கியோ செல்கிறேன்.”

“அனைத்து இந்தியர்களின் சார்பாக, பிரதமர் கிஷிதா மற்றும் திருமதி அபே-வுக்கு நான் இரங்கலை தெரிவிப்பேன். மறைந்த அபே  அவர்கள் எதிர்பார்த்ததுபோல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************  

(Release ID: 1862290)

IR-RS-SM


(வெளியீட்டு அடையாள எண்: 1862330) வருகையாளர் எண்ணிக்கை : 232