பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தற்சார்பு இந்தியாவை நோக்கிய புதிய முயற்சி
प्रविष्टि तिथि:
26 SEP 2022 4:04PM by PIB Chennai
பிஸ்டன் என்ஜின் வகை விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான சிறப்பு எரிபொருள் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல், எரிபொருளை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப்சிங் பூரி இன்று அறிமுகம் செய்தார். அப்போது பேசிய அவர், உயிரி எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் அறிமுகம் மூலம் நாம் எரிபொருள் இறக்குமதியை சார்ந்துள்ளது குறைந்து வருவதாக தெரிவித்தார்.
விமான நிலையங்கள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், எதிர்காலத்தில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றுக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல், எரிபொருள் முக்கிய தேவையாக இருக்கும் என்று கூறினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல், எரிபொருள் மூலம், நாட்டில் அன்னிய செலாவணி சேமிப்பு ஏற்படும்.
இந்த வகை எரிபொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும், முதல் எண்ணெய் சந்தை நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862258
**************
IR-RS-SM
(रिलीज़ आईडी: 1862288)
आगंतुक पटल : 289