சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆரோக்ய மந்தன் 2022 திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
23 SEP 2022 1:43PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 4 ஆண்டுகள் நிறைவையும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில் ஆரோக்ய மந்தன் 2022-ஐ, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா 2022 செப்டம்பர் 25 அன்று தொடங்கி வைக்கிறார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர்.வி.கே.பால் மற்றும் அரசு உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், தொழில்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்தை சேர்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்ய திட்டம் செப்டம்பர் 23 2022 அன்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் மற்றும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் செப்டம்பர் 27 2022 அன்று முதலாண்டை நிறைவு செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861702
**************
(रिलीज़ आईडी: 1861743)
आगंतुक पटल : 326