விவசாயத்துறை அமைச்சகம்

ரபி 2022-23-க்கான பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் விதை பைகளை விநியோகம் செய்வதன் மூலம் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது

Posted On: 22 SEP 2022 4:06PM by PIB Chennai

விதை என்பது பயிர்களின் உற்பத்தித் திறனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் திறன் கொண்ட முழுமையான தொழில்நுட்பம். நல்ல விதைகள் கிடைப்பது உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும், ஒட்டுமொத்த விவசாய சூழல் அமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம் உயரும். சில மாநிலங்களில் முறையற்ற மழைப்பொழிவு அல்லது மழை பற்றாக்குறை காரணமாக, ராபி பயிர்களை குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை முன்கூட்டியே விதைக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

ரபி 2022-23-க்கான வழக்கமான விநியோகத்தை தவிர, மழைப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களை குறி வைத்து, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் விதைப்பைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. தேசிய விதைகள் கழகம், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றால் மத்திய முகமைகளால் விதைப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் நிதியுதவியை பெறுகின்றன.

புதிதாக வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் விதைகளை பின்வரும் நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான விதைப்பை திட்டத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க விவசாயிகளிடையே சமீபத்திய பயிர் வகைகளை பிரபலப்படுத்துதல்
  • 2022-ஆம் ஆண்டில் ரபி பருவக் காலத்தில் மழை குறைவாக பெய்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விநியோகித்தல்
  • மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பாரம்பரியமற்ற ராப் சீட்ஸ் மற்றும் கடுகு உற்பத்திக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கியது
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மற்றும் கர்நாடகா போன்ற தென்மாநிலங்களுக்கு நிலக்கடலைக்காக பெரிய ரபி எண்ணெய் வித்துக்களையும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சிறிய எண்ணெய் வித்துக்களையும், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு குங்குமப்பூவையும் விநியோகம் செய்வது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861495

                              **************

Release ID: 1861495

KG/SM



(Release ID: 1861545) Visitor Counter : 166