வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மையான இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மக்கள் இயக்கமாக மாறியுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு கௌசல் கிஷோர் பேச்சு

Posted On: 21 SEP 2022 11:42AM by PIB Chennai

தூய்மை புத்தொழில் சவால் போட்டியில் வெற்றியாளர்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நேற்று பரிசுகளை வழங்கியது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கௌசல் கிஷோர்இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் திரு இமானுவேல் லெனைன்அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷிதுப்புரவு மற்றும் கழிவு மேலாண்மை துறையில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 விழாவில் பேசிய அமைச்சர்தூய்மையான இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைநகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் தொடக்கம் மூலம் மக்கள் இயக்கமாக வடிவம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்த இயக்கத்தின் கீழ் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வது மற்றும் அவற்றை பயனுள்ள பொருட்களாக மாற்றும் செயல்குப்பைகள் இல்லாத நகரங்களை நோக்கிய பாதையில் பயணிக்க உதவுவதுடன்மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பையும் உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மை புத்தொழில் சவாலின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 புத்தொழில் நிறுவனங்களில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ. 25 லட்சம் நிதி உதவியை புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முன்முயற்சியான ஃபிரான்ஸ் அரசின் ஃபிரெஞ்ச் டெக் நிறுவனத்திடம் இருந்து பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். மீதமுள்ள 20 நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ. 20 லட்சத்தை நிதி உதவியாக இந்திய அரசிடமிருந்து பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 இந்த சவால் வாயிலாக புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சி, ‘மேக் இன் இந்தியாவைநோக்கிய நடவடிக்கை என்று திரு கௌசல் கிஷோர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861046

**************



(Release ID: 1861088) Visitor Counter : 157