ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உலகளாவிய ரசாயனம் மற்றும் உரச்சந்தையை வழிநடத்த இந்தியாவின் சொந்த மாதிரியை உருவாக்க வேண்டும் என மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா அழைப்பு
Posted On:
20 SEP 2022 3:42PM by PIB Chennai
“ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் துறையானது, பிரதமர் திரு.நரேந்திர மோடியின், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிசைந்து, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முடியும். ரசாயனம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் துறையின் 3-வது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் இணையமைச்சர் பாக்வந்த் குபாவும் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் ரசாயனம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் துறையானது, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கணிசமான ஆற்றலை பெற்றுள்ளதாக தெரிவித்தார். “ரசாயனம் மற்றும் உரங்கள் துறையில், உலகளாவிய சந்தையை வழிநடத்த இந்தியா தனது சொந்த மாதிரியை உருவாக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். “உலகளாவிய தேவைகள் மற்றும் சீரமைக்கப்பட்ட தொழில்களின் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்த எதிர்கால உத்தியை உருவாக்குமாறு நிறுவனங்களையும், ஆய்வுக் குழுவினரையும் அவர் கேட்டுக் கொண்டார். சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது” என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860855
**********
(Release ID: 1860898)
Visitor Counter : 221