வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
திரு பியூஷ் கோயல் சவூதி அரேபியா பயணத்தை சிறப்பாக நிறைவு செய்தார்
Posted On:
19 SEP 2022 6:15PM by PIB Chennai
சவூதி அரேபியாவில் செப்டம்பர் 18, 19 -2022 அன்று நடைபெற்ற இந்தியா – சவூதி அரேபியா நட்புறவு குழுமத்தின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். இக்கூட்டத்தில், சவூதி அரேபியா எரிசக்தித்துறை அமைச்சர் இளவசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் அல் சவுத் கலந்து கொண்டார்.
இப்பயணத்தின் போது, சவூதி அரேபிய வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி-யை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்கள் குறித்து திரு பியூஷ் கோயல் விரிவாக விவாதித்தார்.
சவூதி அரேபியாவில் இந்திய மருந்து பொருட்களின் சந்தை வாய்ப்பை அங்கீகரித்தல், வர்த்தகத் தடைகளை நீக்குதல், யுபிஐ மற்றும் ரூபே அட்டைகளை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் திரு பியூஷ் கோயல் உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை காணமுடிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியா எரிசக்தித்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அசீ்ஸ் பின் சல்மான் அல் சவுத்தை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக வலுவான நட்புறவு குறித்து அவருடன் விவாதித்ததாக ட்விட்டர் பதிவில் திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
ரியாதில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தானியங்கள், ஜவுளிகள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களை பிரபலப்படுத்தும் வகையிலான தி இந்தியா வீக் என்ற நிகழ்ச்சியையும் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860633
**************
(Release ID: 1860668)
Visitor Counter : 243