நிதி அமைச்சகம்

2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 18 SEP 2022 1:29PM by PIB Chennai

நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் புள்ளிவிவரங்கள், 17.09.2022 வரையிலான நிலவரப்படி நிகர வசூல் ரூ. 7,00,669 கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே  காலப்பகுதியில் அதாவது 2021-22 நிதியாண்டின் ரூ. 5,68,147 கோடியுடன் ஒப்பிடுகையில், இது  23% அதிகரிப்பைக் குறிக்கிறது. நிகர நேரடி வரி வசூல் ரூ. 7,00,669 கோடியில்,  கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 3,68,484 கோடி உள்ளடங்கியதாகும். தனிநபர் வருமான வரி (பிஐடி) பங்கு  பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உட்பட ரூ. 3,30,490 கோடி.

 

2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 8,36,225 கோடியுடன், முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன்  ஒப்பிடுகையில் அதாவது 2021-22 நிதியாண்டில், ரூ. 6,42,287 கோடியாக இருந்தது. இது 30% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

 

17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளின் செயலாக்க வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட ரீஃபண்டுகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 468% அதிகரிப்புடன் விரைவாக பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வழிவகுத்தது. ரூ. 2022-23 நிதியாண்டில் 17.09.2022 வரை 1,35,556 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. முந்தைய 2021-22 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 74,140 கோடி திரும்பச் செலுத்தப்பட்டது. இது 83% வளர்ச்சியைக் காட்டுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860359

****



(Release ID: 1860389) Visitor Counter : 207