கலாசாரத்துறை அமைச்சகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க மற்றும் மறக்க முடியாத நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம் நாளை தொடங்குகிறது

Posted On: 16 SEP 2022 2:43PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும், மதிப்புமிக்க மற்றும் மறக்க முடியாத பரிசுப் பொருட்கள் மின் ஏலத்தின் 4-வது பதிப்பை கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இந்த மின் ஏலத்ததை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கிழக்குப் பிராந்தியங்களின் அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, நடைபெறவுள்ள மின் ஏலம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மேக்வாலா, மீனாக்க்ஷி லேகியும் உடன் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கிழக்குப் பிராந்தியங்களின் அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, “கடந்த 2119-ஆம் ஆண்டில் இந்த பொருட்கள் மக்களுக்காக நேரடியாக ஏலம் விடப்பட்டன. அதன் முதல்சுற்றில் 1805 பரிசுப் பொருட்களும், இரண்டாவது சுற்றில் 2772 பரிசுப் பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. 2021 செப்டம்பரில் 1348 பரிசுப் பொருட்கள் மின் ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 1200 நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் மின் ஏலத்தில் விடப்படுகின்றன. புதுதில்லியிலுள்ள நேஷ்னல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை இணையதளத்திலும் பார்க்கலாம்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859785

 **************



(Release ID: 1859826) Visitor Counter : 158