குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

‘வசுதைவ குடும்பகம்’ நமது நாகரீக நெறிமுறையின் அடிப்படையை பிரதிபலிக்கிறது-குடியரசு துணைத்தலைவர்

Posted On: 14 SEP 2022 1:22PM by PIB Chennai

‘வசுதைவ குடும்பகம்’ (உலகை ஓர் குடும்பமாக கருதுவது) நமது நாகரீக நெறிமுறையின் அடிப்படையை பிரதிபலிக்கிறது என்று-குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்திப் தங்கர் இன்று கூறினார்.

புதுதில்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் இந்தியாவின் முக்கிய ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், நமது அரசிலமைப்பு சட்டத்தின் முகவுரைகள், நம்முடைய பல்வேறு முக்கிய மதிப்புகளை விவரிக்கிறது என்று தெரிவித்தார். கொவிட்- 19 தொற்றின் போது, தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கம் பற்றி குறிப்பிட்ட அவர், வரலாற்றில் இதுபோன்ற வெளிப்பாடு இந்தியாவில் இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

தேசிய ராணுவ கல்லூரியை பாராட்டிய அவர், இந்தியாவின் ராணுவ கல்லூரியில் மிகவும் வலிமை வாய்ந்த மையமாக திகழ்கிறது என்று கூறினார். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக புகழ்மிக்க மற்றும் சர்வதேச நிலையிலான அளவிற்கு இக்கல்லூரி வளர்ச்சி பெற்றுள்ளதாக குடியரசு துணைத்தலைவர் திரு தங்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859153

**************



(Release ID: 1859182) Visitor Counter : 179