நித்தி ஆயோக்
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச நீர் சங்கத்தின் உலக தண்ணீர் மாநாட்டில், 'இந்தியாவின் நகர்ப்புற கழிவுநீர் நிலைமை' தொடர்பான வெள்ளை அறிக்கையை, இந்தியா - டேனிஷ் அமைச்சர்கள் வெளியிட்டனர்
Posted On:
14 SEP 2022 12:42PM by PIB Chennai
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் 2022 செப்டம்பர் 12 அன்று நடைபெற்ற சர்வதேச நீர் சங்கத்தின் உலக தண்ணீர் மாநாடு மற்றும் கண்காட்சி 2022-ல், நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், டென்மார்க்கின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி.லியா வெர்மெலின், டென்மார்க்கின் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.பிளமிங் முல்லர் மோர்டென்சன் ஆகியோர் 'இந்தியாவின் நகர்ப்புற கழிவுநீர் நிலைமை' என்ற வெள்ளை அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.
புதுமை கண்டுபிடிப்புகளுக்கான இயக்கம், நித்தி ஆயோக், நீர்வளத்துறை அமைச்சகம், கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கம், டென்மார்க்கின் புதுமைகளுக்கான சர்வதேச நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (பாம்பே) ஆகியவை நகர்ப்புற கழிவுநீர் மேலாண்மைக்கான வெள்ளை அறிக்கையை தயாரித்துள்ளன.
கழிவுநீர் மேலாண்மை குறித்த, அனைத்து பங்கேற்பாளர்களின் கவலைகளை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் எதிர்கால சுத்திகரிப்பு கட்டமைப்புகளை இணைந்து உருவாக்குதல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த வெள்ளை அறிக்கை விவரிக்கிறது.
புதுமை கண்டுபிடிப்புகளுக்கான இயக்கம், நித்தி ஆயோக், நீர்வளத்துறை அமைச்சகம், கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கம், டென்மார்க்கின் புதுமைகளுக்கான சர்வதேச நிறுவனம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (பாம்பே) ஆகியவற்றின் நிபுணர்கள் தயாரித்துள்ள இந்த வெள்ளை அறிக்கை, கழிவுநீர் மேலாண்மையின் வெற்றிக் கதைகள், கழிவுநீர் சுத்திகரிப்பின் அவசியம், தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், பொதுமக்கள் பங்கேற்பதற்கான அணுகுமுறைகள், நிதியுதவி மற்றும் இணைநிதியுதவிக்கான விருப்பங்கள், விரைவான தரவு சேகரிப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள், இந்திய நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859135
**************
(Release ID: 1859169)
Visitor Counter : 278