புவி அறிவியல் அமைச்சகம்
தற்போது நடைபெற்று வரும் கடற்கரை தூய்மை இயக்கம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
13 SEP 2022 6:35PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவிஅறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இயக்கத்தில் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள், பிரமுகர்கள், திரைப்படம் மற்றும் விளையாட்டு ஆளுமைகள், சமூக சேவைக் குழுக்கள், மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்று உறுதிமொழி ஏற்பதன் மூலம், தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக கூறினார். உலகிலேயே நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தியாவில் ‘தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்’ என்ற மையப் பொருளுடன் மத்திய அமைச்சகங்கள், துறைகள், கடற்கரை பகுதியில் உள்ள மாநில அரசுகள், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மத்திய புவிஅறிவியல் அமைச்சகம் இந்த இயக்கத்தை நடத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் இன்னும் 3 நாட்களில் செப்டம்பர் 17 அன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், அந்நாளில் தாம் மகாராஷ்ட்ராவின் ஜூஹூ கடற்கரை தூய்மை இயக்கத்தில் ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ், ஆகியோருடன் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
கடற்கரையோரமாக உள்ள ஒடிசா, மேற்கு வங்கம், கோவா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்களின் விவரங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை தூய்மை இயக்கத்தில் செப்டம்பர் 17 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கு பெறுவதாகவும், புதுச்சேரி கடற்கரையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடற்கரையோர மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858999
******
(Release ID: 1859027)
Visitor Counter : 178