நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வுப் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 13 SEP 2022 2:22PM by PIB Chennai

செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வுப் பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  தலசீமியா மற்றும் ரத்த சோகை நோயால்  பாதிக்கப்படக்கூடிய  வாய்ப்புள்ள மக்களிடையே செறிவூட்டப்பட்ட அரிசியின்  நுகர்வு குறித்து தெளிவுபடுத்தும் வகையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தலசீமியா மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையைக் கொண்ட பழங்குடியினர் பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள்  பயிலரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 இந்தவகையில் குஜராத் மாநில அரசு வாபியில் உள்ள மெரில் அகாடமியில் பயிலரங்குகளுக்கு கடந்த 9ந் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்குகளில் குஜராத் மாநில நிதியமைச்சர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி,தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858921

******



(Release ID: 1858930) Visitor Counter : 167