சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022, செப்டம்பர் 12 அன்று தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுடன் கலந்துரையாடல் அன்று தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு


பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வுக்குக் கூட்டாகத் தலைமை தாங்குவார்கள்

Posted On: 11 SEP 2022 2:57PM by PIB Chennai

போதைப் பொருள்களின்  அபாயகரமான தாக்கம் குறித்து இளைஞர்களிடம் எடுத்துரைக்க  வேண்டியதன் அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டும் இளைஞர்களிடையே அதிக செல்வாக்கு பெற்றுள்ள தேசிய மாணவர் படைக்கு அங்கீகாரம் அளிக்கவும் தேசிய மாணவர் படையினருடன் கலந்துரையாடல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்புக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பீம் லையரங்கில் 2022 செப்டம்பர் 12 அன்று  ஏற்பாடு செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வுக்குக் கூட்டாகத் தலைமை தாங்குவார்கள்

நாட்டில் உள்ள தேசிய மாணவர் படையின் அனைத்து 17 மாநில  இயக்ககங்களும் இணையம் வழியாக  இந்த நிகழ்வில் பங்கேற்கும்.

மாநிலங்களின் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், டாக்டர் அம்பேத்கர் இருக்கை கல்வி நிறுவனங்கள் மற்ற கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த இணைய வழி நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு வசதி செய்து தருமாறும் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் அவரவர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தக்  கலந்துரையாடல் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறும்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான என்சிசி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் சிறார்கள் மற்றும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தெரிவு செய்யப்பட்ட 272 மாவட்டங்களில் 2020 ஆகஸ்ட் 15 அன்று மத்திய அரசால் போதைப் பழக்கம்  இல்லாத இந்தியா இயக்கம்  தொடங்கப்பட்டதுஇதுவரை 3 கோடி இளைஞர்கள், 2 கோடி பெண்கள், 1.59 லட்சம் கல்வி நிறுவனங்கள்  உட்பட 8 கோடிக்கும் அதிகமானோர் போதைப் பழக்கம்  இல்லாத இந்தியா  இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

என்சிசி மாணவர்களின் தீவிர ஈடுபாட்டுடன் இந்த இயக்கத்தை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லவும் போதைப் பழக்கம் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடையவும் முடியும் என்று சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை எதிர்பார்க்கிறது.

 

*****


(Release ID: 1858540) Visitor Counter : 166