அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மத்திய -மாநில -அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிதியாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து 2022 செப்டம்பர் 11 அன்று விவாதிக்கப்பட்டது

Posted On: 11 SEP 2022 1:36PM by PIB Chennai

மத்திய -மாநில -அறிவியல் மாநாட்டில்  அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பில் தனியார் துறை பங்களிப்பை விரிவுபடுத்துதல், கூட்டான நிதிக்குரிய நடைமுறைகளை மேம்படுத்துதல் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஆதாரங்களை அதிகப்படுத்தும் திட்டம் மற்றும் வழிவகைகள் குறித்து 2022 செப்டம்பர் 11 அன்று விவாதிக்கப்பட்டது.

"ஆராய்ச்சி, மாற்றத்திற்கான ஆராய்ச்சி, வணிகமயத்திற்கு வசதி செய்வது ஆகியவற்றில் முதலீட்டை நாம் அதிகரிப்பது அவசியமாகும்இவற்றைத் தனியார் துறை மூலம் விரிவுபடுத்த முடியும்" என்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இரட்டிப்பாக்குவது குறித்த இந்த மாநாட்டின் குழுவிவாதத்தில் இன்போசிஸ் இணை நிறுவநர்   டாக்டர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அறிவைப் பெருக்குதல்பரப்புதல்பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதி உதவியை வலியுறுத்திய அவர், கட்டுமானங்கள்அருகருகேயான தொழிற்சாலை, கல்விநிலை, வரி நிறுத்தத்திற்கான ஊக்குவிப்பு ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார். தொழிற்சாலைகளிடம்  இருந்து பெறப்படும் சமூகப் பொறுப்புக்கான  தீர்வையிலிருந்து குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தை குடிநீர், புற்றுநோய் போன்ற தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் எதிர்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் செலவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு  வரிக்குறைப்பை மீண்டும் கொண்டு வருதல் மூலமாக நிதி சேர்த்தல்ஆராய்ச்சி துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சுழலை உருவாக்குதல் போன்றவற்றை   மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ் குப்தா வலியுறுத்தினார்

ஆராய்ச்சிக்கு 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகம்  ஈர்த்திருப்பதாகவும்  இத்தகைய உதாரணங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858470

 

*****



(Release ID: 1858534) Visitor Counter : 157