பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அகமதாபாத்தில் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Posted On: 10 SEP 2022 3:51PM by PIB Chennai

அறிவியல் என்ற ஆற்றல் 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மூலை, மூடுக்கெல்லாம் வளர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றது. நான்காவது தொழில் புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான இந்தியாவின் முனைப்பு வெற்றி பெற, அறிவியல் முன்னேற்றமும் அறிவியலுடனான மக்களின் நெருக்கமும் மேலும் அதிகரிக்க வேண்டும்.. அறிவும், அறிவியலும் இணையும் போது, உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தானாகவே தீர்வு ஏற்பட்டுவிடும்.

மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெஸ்லா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகை வியப்படையச் செய்தனர். இதே காலத்தில் சி.வி.ராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல இந்திய விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டு வந்தனர்.

நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்களை நாட்டுக்கு அவர்கள் தந்துள்ளனர். கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததிலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றி பெறச் செய்ததிலும் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதனால், கண்டுபிடிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ல் 46-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

நமது இளம் தலைமுறையின் டிஎன்ஏ-வில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வம் உள்ளது. இளைய தலைமுறைக்கு முழு பலத்துடன் நாம் ஆதரவு தருவது அவசியம். இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு உணர்வுக்கு ஆதரவாக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை இதனை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவுக்கென தனி அடையாளத்தையும், வலிமையையும், ஆற்றலையும் ஏற்படுத்தி அனைவரும் பறைசாற்றும்படி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858290

---

 


(Release ID: 1858481) Visitor Counter : 176