வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
லாஸ் ஏஞ்சல்சில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான முதலாவது நேரடி கூட்டத்தில் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்
Posted On:
09 SEP 2022 11:04AM by PIB Chennai
லாஸ் ஏஞ்சல்சில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) அமைச்சர்கள் நிலையிலான முதலாவது நேரடி கூட்டத்தில் மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர், “இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் விவாதிக்கப்படும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களின் அடிப்படையில் நம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
ஐபிஇஎஃப்-ன் 14 உறுப்பினர்களுடன் பயனுள்ள உரையாடல் நடைபெற்றது என்று கூறிய திரு கோயல், மற்ற உறுப்புநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கடின உழைப்பின் வெளிப்பாடே இந்த சந்திப்பும், அதனைத் தொடர்ந்த உரையாடலும் ஆகும் என்றார். இரு நாடுகளுக்கு இடையே பொதுவான நலன்சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வது தொடர்பான வழிகாட்டுதலுக்கு இறுதி வடிவம் இன்னும் ஓரிரு நாளில் ஐபிஇஎஃப் கட்டமைக்கும் என்று அவர் கூறினார்.
“இந்திய – அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தப்பட்ட தொடர்புகளை விரிவாக்கம் செய்வதற்கும், உலகளாவிய வழங்கல் தொடர்களை வலுவாக்குவதற்கும் ஆழமாக விவாதிக்கப்பட்டது என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி வருவதை நான் காண்கிறேன். குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக விரைவில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857960
-------------
(Release ID: 1857999)
Visitor Counter : 232