குடியரசுத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 SEP 2022 5:05PM by PIB Chennai
ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“புனிதமான ஓணம் பண்டிகை நாளன்று இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக கேரளாவின் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பயிர்கள் அறுவடையை குறிப்பதாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நமது விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவதோடு, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விளங்குகிறது.
கேரள மக்கள் அவர்களின் வளமான, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர். பரஸ்பர ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இந்த விழா அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இந்நாளில் ஒன்றுபட்டு உழைக்கவும், வளமான புகழ்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பங்களிப்பு செய்யவும் நாம் உறுதியேற்போம்” என்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.
**************
(रिलीज़ आईडी: 1857507)
आगंतुक पटल : 212