வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

திரு.பியூஷ் கோயல், சான் ஃப்ரான்சிஸ்கோவின் வளைகுடா பகுதியில், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 07 SEP 2022 10:42AM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், இன்று சான் ஃப்ரான்சிஸ்கோவின் வளைகுடா பகுதியில், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

“சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் முதலீட்டாளர்களுடன் பயனுள்ள வகையில் அவர் கலந்துரையாடினார். “இந்தியாவின் துடிப்பு மிக்க புத்தொழில் சுற்றுச்சூழலுடன் அதிக ஈடுபாட்டுடன், ஒத்துழைக்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தியதாக” அமைச்சர் ட்விட் செய்துள்ளார். இந்தியாவின் புத்தொழில் முனைவோர் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

திரு.பியூஷ் கோயல் இன்று சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள Zscaler-ன் தலைமை செயல் அதிகாரி திரு.ஜே.சௌத்ரியையும் அவர் இன்று சந்தித்தார்.  

“டிஜிட்டல் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், பாதுகாப்பான டிஜிட்டல் இந்தியாவை உறுதி செய்வதற்காக நாட்டின் இணைய பாதுகாப்பை மேலும் விரிவுப்படுத்துவற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று அமைச்சர் ட்விட் செய்துள்ளார்.

சர்வீஸ் நௌ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, திரு.மெக்டர் மார்ட்டுடன் திரு.பியூஷ் கோயல் கலந்துரையாடினார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப சகாப்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் இயல் கற்றல் ஆகியவை மென்பொருள் துறையில் வியத்தகு மாற்றங்களை சேவைகளாக அதிகப்படுத்தி வரும் சூழலில் இத்தகைய சந்திப்புகள் இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரத்துக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ட்விட் செய்துள்ளார்.

சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு வணிக பட்டதாரி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், முன்னதாக அமைச்சர் கலந்துரையாடினார். சிலிகான் வேலியிலுள்ள தொழில் முனைவோருக்கான மூலதன நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய தொழில் முனைவோர், இந்திய சமூக மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தூதரகம் நடத்திய சமூக நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்திய வணிகர்களுக்கும், புதிய தொழில் முனைவோருக்கும் வளைகுடா பகுதி மிகவும் உகந்ததாக இருப்பதாக” குறிப்பிட்டார். 1.3 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சந்தையில், அவர்கள் பெரும் திறமைகளை உணர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857304                                                   

**************



(Release ID: 1857351) Visitor Counter : 190