வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சான் ஃபிரான்சிஸ்கோவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மரியாதை
Posted On:
06 SEP 2022 8:52AM by PIB Chennai
சான் ஃபிரான்சிஸ்கோவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மரியாதை செலுத்தினார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நமது செயல்களுக்கும், திறன்களுக்கும் இடையே உள்ள வேறுபாடே போதுமானது.”
“சான் ஃபிரான்சிஸ்கோவில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தும் வேளையில், சமமான மற்றும் வளமான உலகை வடிவமைப்பதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், திறமைகளையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.”
பிறகு, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள காடர் நினைவரங்கிற்கு அமைச்சர் சென்றார். நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த திரு கோயல், “நமது பேரன்பிற்குரிய தாய் நாட்டிற்காக ‘அனைத்தையும்’ தியாகம் செய்த நம் முன்னோர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கும் உணர்வோடு இன்று காடர் நினைவகத்தில் நிற்கிறேன்.
அமிர்த காலத்தில், வளர்ந்த மற்றும் வளமான நாடாக இந்தியா உருவாவதற்கு சேவை புரிவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன்.
ஜெய் ஹிந்த்!”, என்று கூறினார்.
இந்திய- அமெரிக்க கேந்திர கூட்டுமுயற்சி மன்ற மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு மத்திய அமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856970
**************
(Release ID: 1857021)
Visitor Counter : 174