தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நாளைய 75 படைப்புக்கான விண்ணப்பங்களை அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 05 SEP 2022 5:17PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்  ‘நாளைய 75 படைப்பு’க்கான விண்ணப்பங்களை இன்று முதல் வரவேற்கிறது. கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, திரைப்படத்தயாரிப்பு பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள இளைஞர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இது நடத்தப்படுகிறது.

அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக  இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டையொட்டி  கடந்த 2021ஆம் ஆண்டு இம்முயற்சி தொடங்கப்பட்டது.

53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவையொட்டி,  தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மூலம், நியமிக்கப்பட்டுள்ள நடுவர்கள், நாளைய 75 படைப்புக்கான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதன் மூலம் கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது தேசியம் மற்றும் சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் உரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

கோவாவில் நடைபெறவுள்ள திரைப்படவிழாவின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ‘நாளைய 75 படைப்பாளர்கள்’ கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். மேலும், ஒவ்வொரு குழுவும் போட்டியில் பங்கேற்று 53 மணி நேரங்கள் ஓடக்கூடிய குறும்படத்தை தயாரிக்க உள்ளனர்.  குறும்படத்திற்கான தலைப்பு அமிர்தப்பெருவிழாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.  படைப்பாளர்கள், இந்தியா@100 என்ற தலைப்பில் தங்களது கருத்துக்களை காட்சிப்படுத்த உள்ளனர். இந்த 7 குழுக்களால் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்  நவம்பர் 24, 2022 அன்று இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் போது காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856855

**************



(Release ID: 1856884) Visitor Counter : 161