அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அகமதாபாத் அறிவியல் நகரில் நடைபெறவுள்ள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் குஜராத் அறிவியல் மாநாடு, மத்திய அரசின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் ஏற்பு மற்றும் அளவு மேம்பாட்டுக்கு மாநிலத்தின் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியும்

Posted On: 04 SEP 2022 2:26PM by PIB Chennai

அகமதாபாத் அறிவியல் நகரில்  பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் குஜராத் அறிவியல் மாநாடு, மத்திய அரசின்  ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் ஏற்பு மற்றும் அளவு  மேம்பாட்டுக்கு மாநிலத்தின் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியும்.

2022 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இரண்டு நாள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்தபின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) புவி அறிவியல்துறை  இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)) ;   பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

மாநாட்டின் பரந்த கருப்பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்  துறைக்கான தொலைநோக்கு 2047-ஐ முன்வைப்பதாக இருக்கும், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  சவால்கள், மாநிலங்களின் தேவைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பாதை மற்றும் மாநிலங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான தொலைநோக்கு ஆகியவற்றை பூர்த்தி செய்வதாக இருக்கும்என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

"மோடி அரசின் தற்சார்பு திட்டத்திற்கு இசைவாக  2030க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இரட்டிப்பாக்குவதும் ,நாட்டின் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு துணைபுரிவதும் அறிவியல் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிநிரலாக இருக்கும்" என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

அனைத்து 28 மாநிலங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  அமைச்சர்கள், 8 யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், மாநிலங்களின் முக்கிய அதிகாரிகள் - தலைமைச் செயலாளர்கள், மாநிலங்களில் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பான முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் அனைத்து அறிவியல்துறை  செயலாளர்களும் மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநிலங்கள் இணைந்து செயல்படும், மேலும்அறிவியல் தொழில்நுட்பத் தொழில்துறையில்  வலுவான மற்றும் நீண்ட கால மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு நடைறையை மிக உயர்ந்த அளவில்  நிலைநிறுத்த இம்மாநாடு முயற்சிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856633

******


(Release ID: 1856653) Visitor Counter : 216