பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா பெற்றுள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2022 3:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா  பெற்றுள்ளது என்று  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (ஆகஸ்ட் 30, 2022) கூறினார். கடந்த எட்டு வருடங்களாக ஆயுதப்படையினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு நாட்டையும் இந்தியா தாக்கவில்லை என்றும் ஒரு இஞ்ச் அளவிலான அந்நிய நாட்டு நிலத்தையும் கூட இந்தியா கைப்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை. மற்றும் ஒருங்கிணைப்புக்கு எதிராக எவராவது செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த எட்டு வருடங்களாக இந்தியா பலவீனமாக இல்லாமல் இருப்பதாக அவர் கூறினார். நமது ஆயுதப்படையினர் மூலம்  கடந்த 2016 நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மற்றும் 2019-ல் நடத்தப்பட்ட பாலகோட் விமானத் தாக்குதல் மூலம் தீவிரவாதம் குறித்த நமது நிலையை தெளிவுப்படுத்திவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் எந்தவொரு நாட்டையும் விட குறைவாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஆயுதப்படையினர் முழு அளவில தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855465

------


(வெளியீட்டு அடையாள எண்: 1855508) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Telugu