பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் தேவையானவர்களுக்கு சென்றடைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 30 AUG 2022 2:39PM by PIB Chennai

பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் தேவையானவர்களுக்கு சென்றடைந்துள்ளன என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 உத்தரப்பிரதேசத்தின் மெயின்பூரியில் நலத்திட்டப் பயனாளிகள் மற்றும் பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றிய அவர், ஏழைகளுக்கு உதவுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமலும், சாதி, மத, இன பேதமில்லாமலும்,  கடைக்கோடியில் இருப்போருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறினார். இவை தீன்தயாள் உபாத்யாயாவின் அந்த்யோதயா தத்துவத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும்.

 பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வதில் முக்கியமானதாக பஞ்சாயத்ராஜ் அமைப்புகளும், அவற்றின் பிரதிநிதிகளும் உள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இத்தகைய நலத்திட்டங்கள் கிடைக்காமல் ஒருவரும் இல்லை என்பதை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 இதுநாள் வரை மோடி அரசுக்கு எதிராக ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்பதை எடுத்துரைத்த அமைச்சர், வெளிப்படையான அனைவருக்கும் வழங்குவதற்கு ஏற்ற நிர்வாகத்தை கொண்டிருப்பதில் மோடி வெற்றிபெற்றிருப்பதாக  கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855458

***************


(Release ID: 1855473) Visitor Counter : 555