திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திரு தர்மேந்திர பிரதானும் திரு வினய் குமார் சக்சேனாவும் புதுதில்லி மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு முறைசாரா கல்வித் திட்டத்தை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கினர்

Posted On: 27 AUG 2022 5:09PM by PIB Chennai

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் திரு வினய் குமார் சக்சேனாவும் தில்லியில் முறைசாரா கல்வித் திட்டத்தை முடித்ததற்கான சான்றிதழ்களை புதுதில்லி மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு வழங்கினர்

புதுதில்லி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில்  திறன் பயிற்சியை அதிகரிக்க, திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 900 விண்ணப்பதாரர்கள், முறைசாரா கல்வித் திட்டத்தை முடிப்பதற்காக ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி பெற்றனர்.

இந்த நிகழ்வில் சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த  திரு பிரதான், தில்லியின் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா வழிகாட்டுதலின் கீழ் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்  மற்றும் புதுதில்லி மாநகராட்சியின் முன்முயற்சி, இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்   பொருளாதாரமாக மாற்றும் திசையில் மற்றொரு முன்னெடுப்பாகும். மேம்படுத்தப்பட்ட இந்தியா என்ற இலக்கை நிறைவேற்றுவதற்கான உறுதியுடன் நாம் முன்னேறும்போது, திறன் மேம்பாடு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தேசக் கட்டமைப்பிற்கும், இந்தியாவை சுயசார்புடையதாக உருவாக்குவதற்கும்   இத்தகைய முயற்சிகளில் பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்  என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய தில்லி துணைநிலை ஆளுநர் திரு  வினய் குமார் சக்சேனா, பல்வேறு துறைகளில் திறமையான பயிற்சி பெற்ற 900 பேருக்கு  வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த  சான்றிதழ்கள் அவர்களின் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைய உதவும் என்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ், கட்டுமானம், மின்சாரம், பிளம்பிங், மண் பாண்டங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பலவற்றில் தொழிலாளர்கள் திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.இத்திட்டத்தின் முதல் கட்டம் 2022 நவம்பருக்குள் 25,000 பேருக்கு பல்வேறு துறைகளில் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும், அதேபோல் இரண்டாவது கட்டத்தில் 5,000 பேர் தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுவார்கள் மற்றும் மூன்றாவது  கட்டத்தில் 45,000 பேர் மேம்படுத்தப்படுவார்கள்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854848

•••••••••••••

 



(Release ID: 1854868) Visitor Counter : 129