சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
வணிக நீதிமன்றங்கள், மாற்று தகராறு தீர்வு வழிமுறைகள் போன்ற நடுவர் மன்றம், நடுநிலைக் குழுவில் பணிபுரிபவர்களின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியா - இங்கிலாந்து ஒப்புதல்
Posted On:
23 AUG 2022 1:05PM by PIB Chennai
இந்தியா - இங்கிலாந்து கூட்டு ஆலோசனைக் குழுவின் அண்மைய கூட்டத்தில், வணிக நீதிமன்றங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தகராறுகளை தீர்த்து வைக்கும் நடுநிலைக் குழுவில் பணியாற்றுபவர்களின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல், வழக்கு நிர்வாகம், நீதி வழங்குதல் மற்றும் ஒப்பந்தங்களை செயல்படுத்துதல் மற்றும் எளிமையான சட்டவரைவு ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக இந்தியா - இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சட்ட ஆலோசகர்கள், வரைவாளர்கள், நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கு, புகழ் பெற்ற நிறுவனங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
சட்டம் மற்றும் நீதித்துறையில், இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், 2018 ஜூலை 18-ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்தும் கையெழுத்திட்டன. ஒத்துழைப்புத் துறைகளில் முன்னேறி செல்லும் வழியை உறுதிப்படுத்துவதன் மூலம், அதன் நோக்கங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டு ஆலோசனைக் குழு தொடங்கப்பட்டது. இந்தக் குழுவின் மூன்றாவது கூட்டம், 18 ஆகஸ்ட் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853807
***************
(Release ID: 1853837)
Visitor Counter : 219